கேரளாவை மீண்டும் மிரட்டுகிறது கொரோனா: ஊரடங்கு அறிவிப்பு

Author: Udayaraman
29 July 2021, 9:29 pm
Quick Share

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கேரளாவில் இரு நாள்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் கோர தாண்டவமாடியது. அதிகமான பாதிப்புகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பாதிப்பிலிருந்து மீண்டு வருவது பல மாநிலங்களுக்கு கடும் சவாலாக இருந்தது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. மாநில அரசுகளே ஊரடங்கை அறிவித்து அதன் மூலம் வரும் பாதிப்புகளை எதிர்கொண்டு இரண்டாவது அலையை சமாளித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வருகிறது. ஊரடங்கிலும் பெரியளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவிலிருந்து தற்போது 1750 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. அங்கு தினசரி பாதிப்பு 17ஆயிரமாக உள்ளது.இதனால் அங்கு பொது முடக்கத்தில் பெரியளவில் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. வார இறுதி நாள்களில்முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் வரும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் (ஜூலை 31, ஆகஸ்ட் 1) கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

Views: - 131

0

0