“ரொம்ப சூப்பர் மோடி ஜி”..! மனமுவந்து பாராட்டிய காங்கிரஸ் கட்சி..! எதற்குத் தெரியுமா..?

14 April 2021, 5:48 pm
priyanka_vadra_updatenews360
Quick Share

சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பிற்கு காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டியுள்ளது. 10’ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் அரசாங்கம் அறிவித்த உடனேயே, இது குறித்து சமீப காலமாக பேசிவந்த காங்கிரஸ் கட்சி மத்திய அரசை பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளது.

“சிறப்பாகச் செயல்பட்ட மோடி ஜி, ராகுல் காந்தி, பிரியங்க் காந்தி வாத்ரா மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் தேசத்தை சரிசெய்வதில் நீண்ட தூரம் செல்லும். நமது மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுவது நமது ஜனநாயகக் கடமையாகும். பாஜக இறுதியாக தேசத்தை ஈகோவுக்கு மேல் வைத்துள்ளது.” என்று மத்திய அரசின் முடிவு அறிவிக்கப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சி ட்வீட் செய்தது.

எனினும், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் 12 ஆம் வகுப்புக்கும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், ஜூன் வரை மாணவர்களை அழுத்தத்தில் வைத்திருப்பது நியாயமற்றது என்றும் வலியுறுத்தினார்.

“அரசாங்கம் இறுதியாக 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ததில் மகிழ்ச்சி. இருப்பினும், 12 ஆம் வகுப்புக்கும் ஒரு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். ஜூன் வரை மாணவர்களை தேவையற்ற அழுத்தத்தில் வைத்திருப்பது அர்த்தமல்ல. இது நியாயமற்றது. இப்போதே முடிவு செய்யுமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.” என பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, சிபிஎஸ்இ வாரிய தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பிரியங்கா காந்தி ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியலுக்கு கடிதம் எழுதியிருந்தார். நெரிசலான தேர்வு மையங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்று அதில் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்த வார தொடக்கத்தில் தேர்வுகளை ரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக நாட்டின் நிலைமை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளை ரத்து செய்வதாகவும், 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மே 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் இன்று முன்னதாக அரசாங்கம் அறிவித்தது. சிபிஎஸ்இ ஜூன் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை வெளியிடும் என இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 27

0

0