மீண்டும் திரிணாமுல் காங்.,க்கு தாவிய பாஜக எம்எல்ஏ… குஷியில் மம்தா… கொதிப்பில் அமித்ஷா…!!

Author: Babu Lakshmanan
31 August 2021, 8:22 pm
TMC mla - updatenews360
Quick Share

மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏ மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவிய நிகழ்வு அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. தேர்தல் சமயத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி உள்பட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவினர். அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு, வெற்றியும் பெற்றனர். இதனால், கடந்த தேர்தலை காட்டிலும், இந்த தேர்தலில் வலுவான எதிர்கட்சியாக பாஜக மாறியது.

இதனிடையே, திரிணாமுல காங்கிரஸ் இருந்து விலகி, பாஜக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெற்ற எம்எல்ஏக்களான முகுல் ராய், தன்மே கோஷ் ஆகியோர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். இது பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மற்றொரு எம்.எல்.ஏ.,வான பிஸ்வஜித் தாஸ், திரிணமுல் காங்கிரஸுக்கு திரும்பியுள்ளார். இதன்மூலம், சட்டசபையில் பாஜகவின் பலம் 72 ஆக குறைந்துள்ளது. அடுத்தடுத்து நிகழும் அரசியல் மாற்றங்களால் பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

Views: - 254

0

0