பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் : சோனியாவுடன் திடீர் சந்திப்பு.. மாஸ்டர் பிளானுடன் டெல்லியை வலம் வரும் மம்தா..!!!

Author: Babu
28 July 2021, 7:29 pm
mamata - sonia -updatenews360
Quick Share

டெல்லி : எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

3 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு சென்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியின் முக்கிய கட்சி நிர்வாகிகளை சந்தித்த பிறகு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கக் கோரியும், வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- இந்த சந்திப்பின் போது அரசியல் நிலைமை, பெகாசஸ் & கொரோனா நிலைமை குறித்து விவாதித்தோம். இது ஒரு நல்ல சந்திப்பு.

எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைப்பை சோனியா காந்தி விரும்புகிறார்; மாநில கட்சிகளை காங்கிரஸ் நம்புகிறது, மாநில கட்சிகளும் காங்கிரசை நம்புகிறது. பா.ஜ.க. வலிமையான கட்சியாக உள்ளது; எதிர்க்கட்சிகள் வலிமையாக அமைந்தால் வரலாறு படைக்கலாம், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அதுவே நம்பிக்கை. எனது செல்போன் ஏற்கனவே ஒட்டுகேட்கப்பட்டது. பெகாசஸ் அனைவரின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது, என தெரிவித்துள்ளது.

Views: - 201

1

0