மேற்கு வங்கத்தில் ஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு…! மம்தா பானர்ஜி உத்தரவு

14 June 2021, 6:19 pm
Assam_Lockdown_UpdateNews360
Quick Share

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, அமலில் உள்ள ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜூலை மாதம் 1-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. நாளையுடன் இந்த ஊரடங்கு நிறைவடையும் நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பார்னஜி ஜூலை 1-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். தனியார் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். வணிக வளாகங்களில் உள்ள கடைகள் 50 சதவீத ஊழியர்களுடன், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.உணவகங்கள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன், மதியம் 12 மணி முதல், இரவு 8 மணி வரை செயல்படலாம். மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 135

0

0