3 மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்..!

7 September 2020, 9:35 am
Quick Share

தென்கிழக்கு, கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென் மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கட்டுகள், நீர் நிலைகள் என அனைத்தும் நிரம்பி வழிய தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் அமராவதி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அதேபோல், காவிரி நீர் படிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கேரளாவை பொருத்தவரை மழைக்கு பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அங்கு கனமழை காரணமாக இடற்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலி, அடுத்த 4-5 நாட்களுக்கு தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முன்னதாக, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு கடந்த ஆக்ஸ்ட் மாதத்தில் கிடைத்துள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 10

0

0