கேரளாவில் என்ன நடக்கிறது? உச்சக்கட்ட பாதிப்பால் ஆய்வு செய்ய மத்திய குழு விரைவு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2021, 11:03 am
Kerala Govt Team Visit -Updatenews360
Quick Share

கேரளா : குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் ஆய்வு செய்வதற்காக, 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

மத்திய மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இருந்த போதிலும் மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு குறையாமல் இருந்தது.

ஆனால் நாளடைவில் மற்ற மாநிலங்களில் கொரோனா குறைந்தாலும், கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. இதனால் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1- முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்து, ஆய்வு செய்வதற்காக, 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்த குழு கேரளாவில், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளது.

மேலும், இந்த குழு கேரளாவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்?, மூன்றாவது அலையை தடுக்க என்னென்ன தேவைகள் உள்ளது? உருமாறிய கொரோனா வைரஸின் பாதிப்பு உள்ளதா? உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

Views: - 269

0

0