பைக்கில் தனியாக சென்றால் முகக்கவசம் அவசியமில்லை : இது எந்த மாநகராட்சியின் உத்தரவு தெரியுமா..?

27 August 2020, 5:12 pm
bike drive mask - updatenews360
Quick Share

இருசக்கர வாகனத்தில் தனியாக செல்பவர்கள் முகக்கவசத்தை அணிய தேவையில்லை என அண்டை மாநித்தின் மாநகராட்சி ஆணை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் தவறாது முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது.

முகக்கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்களிடம் இருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இதற்கென மார்ஷல்கள் நியமனம் செய்யப்பட்டு, முகக்கவசம் அணியாத நபர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, முகக்கவசம் அணியவதில் வாகன ஓட்டிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வாகனம் ஓட்டும் போது முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்ற உத்தரவில் பெங்களூரு மாநகராட்சி சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது, இருசக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களில் ஒருவர் மட்டும் செல்லும் போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வாகனத்தின் பின்னால் மேலும் ஒரு நபர் அமர்ந்திருந்தால், கட்டாயம் இருவரும் முகக்கவசம் அணிய வேண்டும், எனக் கூறப்பட்டுள்ளது. பெங்களூரூ மாநகராட்சியின் இந்த அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Views: - 34

0

0