டிராக்டரில் பயணித்த போது மின்சார கம்பி அறுந்து விழுந்து கோர விபத்து : மின்சாரம் பாய்ந்து 6 பேர் பரிதாப பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2022, 5:48 pm
6 Dead - Updatenews360
Quick Share

விவசாய கூலி தொழிலாளர்கள் பயணித்த டிராக்டர் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து ஆறு பேர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தர்காஹொன்னூரை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் விவசாய வேலைக்காக டிராக்டர் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சாலை மீது இருக்கும் உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து கூலி தொழிலார்கள் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது விழுந்தது.

இந்த சம்பவத்தில் டிராக்டரில் பயணித்த ஆறு பேர் மின்சாரம் பாய்ந்து உடல்கள் கறுத்து அதே இடத்தில் மரணம் அடைந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து வந்த அனந்தபுரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 192

0

0