முதலமைச்சராக யாரை நியமிப்பது.. 3 மாநிலங்களில் நீடிக்கும் இழுபறி : பாஜகவினர் போர்க்கொடி.. கையை பிசைக்கும் மேலிடம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2023, 1:43 pm
BJP
Quick Share

முதலமைச்சராக யாரை நியமிப்பது.. 3 மாநிலங்களில் நீடிக்கும் இழுபறி : பாஜகவினர் போர்க்கொடி.. கையை பிசைக்கும் மேலிடம்!

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த டிசம்பர் 3 ஞாயிற்று கிழமை அன்று வெளியானது. அதில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் , சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பாஜக ஆட்சி புரிந்து வந்த மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

மிசோரமில், ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சியை (MNF) பின்னுக்குத் தள்ளி, கடந்த முறை எதிர்கட்சியாக இருந்த ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 40இல் 27 இடங்களை கைப்பற்றியது. இதனால், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சி தலைவர் லால்துஹோமா மிசோரமின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதா கட்சி 2 இடங்களையும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் வெற்றி பெற்றுள்ளது.

தெலுங்காளவில் முதன் முதலாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ், முதல்வர் வேட்பாளரை நேற்றே அறிவிததது. அக்கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா முதல்வராக நாளை பொறுப்பேற்பார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

ஆனால் 3 மாநில தேர்தல் வெற்றியை பெற்ற பாஜக இன்னும் மாநில முதல்வர்கள் யார் என அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்து வருகிறது. ராஜஸ்தானில், வசுந்தரா ராஜே, தியா குமாரி மற்றும் பாபா பாலக்நாத் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. வசுந்தரா ராஜே கடந்த 2003, 2013 ஆகிய காலகட்டத்தில் 2 முறை ராஜஸ்தான் மாநில முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

சத்தீஸ்கரில், மூத்த தலைவர் ராமன் சிங்கிற்கு முதல்வர் பொறுப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், மத்திய பிரதேசத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், ஐந்தாவது முறையாக மீண்டும் பதவியேற்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Views: - 213

0

0