சட்டப்பேரவை தேர்தல் நடத்தும் போது ஏன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது : உச்சநீதிமன்றம் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2021, 11:35 am
SC Question - Updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் போது நகர் புற உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இது குறித்த வழக்கு இன்று விசரணைக்கு வந்தது.

அப்போது நகர்ப்புற தேர்தல் நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியது. அப்போது பேசிய நீதிபதிகள், நாடாளுமன்றம் தேர்தல், சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற தேர்தலை நடத்த ஏன் முடியாது என கேள்வி எழுப்பினர்.

மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் கொடுக்க முடியாது என்றும், கால அவகசாம் தொடர்பாக 2 நாட்களில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

Views: - 164

0

0