வேறு பெண்ணுடன் தொடர்பு : கணவனின் தலையை துண்டித்த மனைவி.. காவல்நிலையத்தில் சரண்.. அதிர்ச்சி வீடியோ!
Author: Udayachandran RadhaKrishnan20 January 2022, 5:37 pm
ஆந்திரா : வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்த கணவனின் தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற மனைவியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவை சேர்ந்த ரவிசந்த்சூரி (வயது 55), வசுந்தரா (வயது 45) ஆகியோருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. அவர்களுக்கு மனநிலை சரியில்லாத மகன் ஒருவர் இருக்கிறார்.
இந்த நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பது பற்றி அறிந்த மனைவி வசுந்தரா கனவனிடம் இதுபற்றி பேசி கண்டித்திருக்கிறார். இதனால் 2 பேருக்கும் இடையே அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளது.
இந்த நிலையில் இன்று கணவனின் கள்ள தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாத மனநிலைக்கு சென்ற வசுந்தரா கணவனை பலமாக தாக்கி கத்தியால் அவருடைய கழுத்தில் வெட்டி கொலை செய்தார்.
பின்னர் கணவனின் தலையை கையில் எடுத்து பையில் போட்டு எடுத்து கொண்டு ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு நடந்து சென்று சரணடைந்தார். கணவன் தலையுடன் மனைவி நடந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வசுந்தராவிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கள்ளத்தொடர்பு காரணமாக கணவனை கொலை செய்தேன் என்று அவர் கூறினார். வசுந்தரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.
கள்ளத்தொடர்பு காரணமாக தந்தையை கொலை செய்து தாய் சிறைக்கு சென்றுவிட்ட நிலையில் மனநிலை சரியில்லாத அவர்களது மகன் தற்போது ஆதரவளிக்க யாருமில்லாமல் நிற்கதியாக நிற்கிறார்.
0
0