இது எங்க ஏரியா… வாகனத்தை கவிழ்த்து விட்டு, சுற்றுலா பயணிகளை ஓடவிட்ட காட்டு யானைகள்…!! வைரல் வீடியோ

Author: Babu Lakshmanan
4 December 2021, 3:48 pm
elephant viral - updatenews360
Quick Share

காடுகளில் வனவிலங்குகளை பார்வையிடச் சென்ற வாகனத்தை காட்டு யானைகள் ஓடவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காடுகளில் உள்ள வனவிலங்குகளை பார்வையிடுவதற்கு டிரெக்கிங் என்னும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, வனத்துறையினரின் பாதுகாப்பான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் காடுகளுக்கு நடுவே அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நடமாடும் வனவிலங்குகளை பார்வையிட செய்யப்படுவதாகும். அப்போது, பல்வேறு சுவாரசியங்கள் நடப்பதுண்டு.

அந்த வகையில், டிரெக்கிங் வாகனத்தில் சென்றவர்களை காட்டு யானை ஒன்று ஓட ஓட துரத்திய காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், வனத்துறையினரின் வாகனத்தை தலைகீழாக கவிழ்த்த காட்டு யானைகள், பயங்கரமாக உறுமியது. இதையடுத்து, அந்த வாகனத்தில் இருந்தவர்கள் அதில் இருந்து கீழிறங்கி, ஓட்டம் பிடித்தனர். ஆனால், அதிர்ஷடவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதனிடையே, காட்டு யானையிடம் இருந்து வாகனத்தில் சென்றவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியதாகவும், அனைத்து நேரங்களிலும் அதிர்ஷ்டம் வேலை செய்யாது எனக் கூறும் வன ஆர்வலர்கள், காடுகளை மதிப்போம், எப்போதும் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பான தூரத்தை கடைபிடிப்போம், என தெரிவித்து வருகின்றனர்.

Views: - 258

0

0