பீகார் தேர்தலுக்கு பின் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி..! மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் மகன் அதிரடி..!

Author: Sekar
16 October 2020, 4:13 pm
Chirag_Paswan_UpdateNews360
Quick Share

பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவர் சிராக் பஸ்வான், தனது தந்தை ராம் விலாஸ் பஸ்வானின் கனவுகளை நனவாக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சிராக் பஸ்வான், “நான் என் தந்தையின் கனவை நிறைவேற்ற விரும்புகிறேன். இதைத்தான் நான் செய்ய வேண்டும் என்று என் தந்தை விரும்பினார்” என்று கூறினார்.

மேலும் பேசிய சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி கட்சிக்கு (எல்ஜேபி) வாக்களிப்பது குறித்து பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி கூறியது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

“எல்ஜேபி பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லை என்பதை ஒவ்வொரு தலைவரும் தெளிவுபடுத்தியுள்ளனர். ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் நான் மக்களுக்குச் சொல்கிறேன். எல்ஜேபி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். இது சில மூலோபாயவாதிககளின் வடிவமைப்பு.” என்று சுஷில் மோடி கூறியிருந்தார்.

இது குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்திய சிராக் பஸ்வான், “எனது தந்தையின் நல்ல நண்பராக இருந்த சுஷில் மோடி ஜியிடமிருந்து இது போன்ற விஷயங்களைக் கேட்பது வருத்தமளிக்கிறது” என்றார்.

“நான் வருத்தப்படுகிறேன், சுஷில் மோடி ஜி கூறியதைக் கேட்டால் என் தந்தையும் வருத்தப்படுவார் என்று நான் நம்புகிறேன்” என்று சிராக் பஸ்வான் மேலும் கூறினார்.

“எனது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்சியின் தளத்தை உருவாக்கியிருந்தார். அவரது கடின உழைப்பின் மூலம் கட்சி தற்போது வெற்றிகரமாக உள்ளது” என்று சிராக் பஸ்வான் மேலும் கூறினார். 

பீகார் தேர்தலைப் பற்றி பேசிய சிராக் பஸ்வான், ‘பீகார் முதல், பீகாரி முதல்’ நிகழ்ச்சி நிரலுடன் மக்களிடையே காலடி எடுத்து வைப்பதாக கூறினார். மேலும் தான் எப்போதும் பாஜக மற்றும் குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பக்கம் நிற்பதாக தெரிவித்துள்ளார்.

“பீகாரி முதல்” என்ற நோக்கத்துடன், மக்களிடையே காலடி எடுத்து வைத்து அவர்களின் நம்பிக்கையை வெல்வதே எனது குறிக்கோள் என்று சிராக் பஸ்வான் தெரிவித்தார்.

பீகாரின் தற்போதைய நிலை குறித்து கேட்கப்பட்டபோது, சிராக் பஸ்வான், “எந்த மாநிலத்தின் தலைவரும் தனது மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு பொறுப்பு” என்றார்.

“முதலமைச்சர் நிதீஷ்குமார் மாநிலத்தை வழிநடத்துகிறார். மாநிலத்தின் தற்போதைய நிலைக்கு அவர் பதிலளிக்க வேண்டும்” என்று சிராக் பஸ்வான் மேலும் கூறினார். “நிதீஷ் குமாரின் கீழ் பணிபுரிபவர்கள் அவர் எடுக்கும் முடிவுகளை கூட அறிந்திருக்கவில்லை.” என மேலும் தெரிவித்தார்.

பீகாரில் வரவிருக்கும் தேர்தலுக்கான தனது திட்டங்கள் குறித்து, சிராக் பஸ்வான், “நான் விரும்பியிருந்தால் பீகாரை எளிதில் ஆட்சி செய்திருப்பேன். ஆனால் எனது மாநில மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் அவரது திட்டங்கள் குறித்து கேட்கப்பட்டபோது, பாஜகவுக்கு தனது ஆதரவு தொடரும் என்று சிராக் பஸ்வான் கூறினார்.

“பீகாரில் தேர்தலுக்குப் பிறகும் நாங்கள் பாரதீய ஜனதாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம், நவம்பர் 10 ஆம் தேதி பீகாரில் பாஜக-எல்ஜேபி அரசாங்கத்தை அமைக்கும் என்று நம்புகிறோம்” என்று சிராக் பஸ்வான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Views: - 53

0

0