2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பது நிறுத்தமா..? மத்திய அரசின் பதில் இது தான்..!
20 September 2020, 3:56 pmரூ 2,000 மதிப்புள்ள நோட்டுகளின் அச்சிடுதல் கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தாலும், அதிக மதிப்புள்ள நோட்டுகளை நிறுத்த முடிவு செய்யவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
நேற்று மக்களவையில் ஒரு கேள்விக்கு வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், குறிப்பிட்ட பிரிவின் வங்கி நோட்டுகளை அச்சிடுவது, இந்திய ரிசர்வ் வங்கியுடன் ரிசர்வ் வங்கி கலந்தாலோசித்து முடிவு செய்யப்படுகிறது.” எனத் தெரிவித்தார்
“2019-20 மற்றும் 2020-21’ஆம் ஆண்டுகளில், ரூ 2000 மதிப்புள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கு தடை விதிக்க அச்சகங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், ரூ 2,000 மதிப்புள்ள வங்கி நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் இல்லை.” என அவர் கூறினார்.
ரூ .2,000 மதிப்புள்ள மொத்தம் 273.98 கோடி நோட்டுகள் 2020 மார்ச் 31’ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்தன. இது 2019 மார்ச் 31 அன்று 329.10 கோடி நோட்டுகளுடன் ஒப்பிடும்போது குறைவானதாகும்.
பல்வேறு பிரிவுகளின் நாணய அச்சிடும் பணியில் தொற்றுநோய்களின் தாக்கம் குறித்த கேள்விக்கு, தாக்கூர், நாடு தழுவிய அளவில் அமலான ஊரடங்கினால் ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறினார்.
இருப்பினும், மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, அச்சகங்கள் ஒவ்வொரு கட்டமாக உற்பத்தியை மீண்டும் தொடங்கி வருகிறது எனத் தெரிவித்தார்.