ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 4 நாட்களில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி: அதிர்ச்சி தகவல்..!!

6 November 2020, 12:01 pm
andra scholl - updatenews360
Quick Share

ஆந்திராவில் பள்ளிகள் திறந்து 4 நாட்களில் 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருவதையடுத்து பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில், பள்ளிகள் திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தது.
இருப்பினும், பள்ளிகள் திறப்பு விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவை எடுத்துக்கொள்ளவும் என மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. மத்திய அரசின் அறிவிப்புபடி, ஆந்திர மாநிலத்தில் கடந்த நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகள் தொடங்கி 4 நாள்களில் 575 மாணவர்களுக்கும் 829 ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய பள்ளிக் கல்வி ஆணையர் வி.சின்னவீரபத்ருது,

கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை கண்டு யாரும் பயப்பட வேண்டாம். பாதிக்கப்பட்ட மொத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 1 லட்சத்து 11 ஆயிரத்து ஆசிரியர்களில் 99 ஆயிரம் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். இவர்களில் வெறும் 829 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 25

0

0