குலுக்கல் முறையில் கணவனை தேர்ந்தெடுத்த பெண் – உ.பி.யில் தான் இந்த விநோதம்

6 March 2021, 2:35 pm
Quick Share

ஒரு பெண்ணை, நான்கு இளைஞர்கள் விரும்பிய நிலையில், ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் முன்னிலையில், குலுக்கல் முறையில், அப்பெண் கணவனை தேர்ந்தெடுத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், ஊடகங்களுக்கு எப்போதும் விசித்திரமான செய்திகளையே தொடர்ந்து வழங்கி வருகிறது என்று சொன்னால் அது மறுப்பதற்கு இல்லை. தற்போதும் அதுபோன்ற நிகழ்வே, அம்மாநிலத்தில் நிகழ்ந்து உள்ளது.


உ.பி, மாநிலம் அஜிம்நகர் பகுதியை அடுத்த தண்டா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணை, அப்பகுதியில் உள்ள நான்கு இளைஞர்கள் காதலித்து வந்துள்ளனர். அப்பெண்ணும், அவர்களுடன் நெருக்கமாகவே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அப்பெண், திடீரென்று தலைமறைவாகி விட்டார்.

அந்த 4 இளைஞர்களும் அதேநேரத்தில் மாயமான நிலையில், பெண்ணின் பெற்றோர், தனது மகள் கடத்தப்பட்டு உள்ளதாகவும், இதற்கு காரணமான அந்த 4 இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பெண்ணின் பெற்றோர் அஜிம்நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர்.


போலீசார் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. ஊர் மக்கள் தேடியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், அந்த பெண், 4 இளைஞர்களுடன், அம்பேத்கர் நகர் கிராம பஞ்சாயத்து முன் ஆஜரானார். தனக்கு இந்த 4 இளைஞர்கள் மீதும் விருப்பம் உள்ளதாகவும், ஆனால் யாரை கணவராக அடைவது என்பதில் குழப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதனையடுத்து, அந்த 4 இளைஞர்களின் பெயரையும் துண்டுச்சீட்டில் எழுதி, குலுக்கல் முறையில் ஒரு சீட்டை எடுத்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் கொண்ட இளைஞர் தான் அப்பெண்ணின் கணவர் என்று அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் சம்பவத்தை பஞ்சாயத்து ஆட்கள் அரங்கேற்றி உள்ளனர்.

Views: - 19

0

0