ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கு ஒரு முறை கற்பழிப்புக்கு உள்ளாகும் பெண்..! அதிரவைத்த என்சிஆர்பி அறிக்கை..!

Author: Sekar
2 October 2020, 1:19 pm
Rape_UpdateNews360
Quick Share

தேசிய குற்ற ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) தனது 2019 ‘க்ரைம் இன் இந்தியா’ அறிக்கையை வெளியிட்டுள்ளது. மேலும் இது இந்தியாவில் பெண்களின் பாதிப்பு குறித்து சில அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கடந்த செவ்வாயன்று வெளியிடப்பட்ட அறிக்கை, இந்தியாவில் பெண்கள் எவ்வாறு அதிக அளவில் பாதுகாப்பற்றவர்களாக மாறி வருகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

சமீபத்திய உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயது தலித் நான்கு உயர் சாதி ஆண்களால் கொடூரமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. செப்டம்பர் 14’ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து சிகிச்சையின் போது டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் திங்கள்கிழமை இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார் என்பதையும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வரதட்சணை மரணம் நிகழ்கிறது என்பதையும் சமீபத்திய என்.சி.ஆர்.பி அறிக்கை மேலும் வெளிப்படுத்துகிறது.

மேலும் ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கும் ஒரு பெண் தனது மாமியார் அல்லது கணவரின் கைகளில் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார் என்று தரவு மேலும் காட்டுகிறது. ஏறக்குறைய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஒரு பெண் ஆசிட் தாக்குதலுக்கு பலியாகிறாள் என்பதை 2019 என்.சி.ஆர்.பி அறிக்கை மேலும் வெளிப்படுத்துகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கற்பழிப்பு முயற்சியை எதிர்கொள்கிறாள். ஒரு பெண்ணை அடக்கி அடிமைப்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் நடைபெறுகிறது.

என்.சி.ஆர்.பி தரவுகளின்படி, ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தலுக்கு இலக்காகி வருகிறார் என்பது மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த அறிக்கை வெளியான நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனைகளை இன்னும் கடுமையாக்கி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை வலுத்து வருகிறது.

Views: - 64

0

0