அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் ஆட்டம்… சர்ச்சையில் சிக்கிய இளம்பெண் : இருந்தாலும் வேற லெவல் ஆட்டம்ப்பா…! (வீடியோ)

Author: Babu Lakshmanan
16 September 2021, 4:44 pm
MP dance - updatenews360
Quick Share

மத்திய பிரதேசம் : அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் தாறுமாறாக ஆட்டம் போட்ட இளம்பெண்ணின் வீடியோ வைரலானதால், அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

செல்போன்களுக்கு அடிமையானவர்கள் என்ற காலம் மாறி இந்த ஆப்களுக்கு அடிமையானவர்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு ஆப்களும் மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. அந்த வகையில், டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு, அதைப் போலவே பல்வேறு செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, டிக்டாக்கிற்கு இணையாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஷார்ட் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி கொண்டதாக இது உருவாக்கப்பட்டது. பெரும்பாலானோர் பாடல்களுக்கு நடனமாடி வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அதிக பார்வையாளர்களை கவருவதற்காகவும், லைக்ஸ்களை குவிப்பதற்காகவும், சிலர் வில்லங்கமான செயல்களை செய்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியில் சிக்னலில் வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் போது, பெண் ஒருவர் அரை குறை ஆடையுடன், நீண்ட நேரம் ஆடி இருக்கிறார். இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அங்கு சிக்னலில் நின்ற கார், பைக்குகளில் இருந்தவர்கள் எல்லாம் இந்த பெண் ஆடுவதை பார்த்துவிட்டு, சிக்னலை பார்க்காமல் திகைத்து நின்று இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் எதிர்பார்த்ததை போலவே, ரீல்ஸில் இந்த வீடியோவைப் பதிவிட்டு அதிக லைக்ஸ்களையும் அள்ளியுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், பிஸியான சாலையில் நடனமாடியவர் ஷ்ரேயா என்பதை போலீசார் கண்டு பிடித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். மேலும், அவர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்தே நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைக் கேட்டு ஆடிப் போன ஸ்ரேயா, எல்லோரும் சாலை விதிகளை மதியுங்கள், மாஸ்க் போடுங்கள் என்று தனது வீடியோவில் கேப்ஷனை மாற்றி ஸ்மார்ட்டாக எஸ்கேப் ஆகியுள்ளார். என்னமோப்பா, பிரச்சனை என்ன வேணாலும் ஆகட்டும், ஆனால் டேன்ஸ் வேற லெவல் என நெட்டிசன்கள் கமண்ட் அடித்து வருகின்றனர்.

Views: - 247

0

0