உலக சிங்க தினம்..! அழிவின் விளிம்பில் ஆசிய சிங்கங்கள்..! இந்தியாவில் உள்ள சிங்கங்கள் எவ்வளவு தெரியுமா..?

10 August 2020, 5:46 pm
World_Lion_Day_UpdateNews360
Quick Share

உலக சிங்க தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10 அன்று, சிங்கம் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அதற்கான ஆதரவை சேகரிக்கும் நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், சிங்கத்தை சிவப்பு பட்டியலில் ஒரு ஆபத்தான உயிரினமாக பட்டியலிட்டுள்ளது.

இந்தியாவில் காணப்படும் ஐந்து பெரிய பூனை இனங்களில் ஆசிய சிங்கமும் ஒன்றாகும். மற்ற நான்கு ராயல் பெங்கால் புலி, இந்திய சிறுத்தை, படைச் சிறுத்தை மற்றும் பனி சிறுத்தையாகும்.

இந்தியாவின் சிங்க எண்ணிக்கை 29 சதவீதம் உயர்ந்துள்ளது
இந்தியாவில், குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும், வனத்தையொட்டிய விவசாய நிலப்பரப்பிலும் சிங்கங்கள் தற்போது காணப்படுகின்றன. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியா தனது சிங்க எண்ணிக்கையில் 2015’ல் 523’ஆக இருந்து 2020’இல் 674’ஆக உயர்ந்தது. 

மொத்தமுள்ள 674 சிங்கங்களில் 206 ஆண், 309 பெண் மற்றும் 137 குட்டிகள் உள்ளன. மீதமுள்ளவை அடையாளம் காணப்படவில்லை. இதற்கிடையில் மக்களின் பங்கேற்பு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், இரையின் தளத்தின் அதிகரிப்பு, மனித-சிங்க மோதல் குறைப்பு போன்றவை இந்த எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம்.

சவால்கள்
குஜராத்தில் சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது புதிய சவால்களுக்கு வழிவகுத்துள்ளது. பிரதேசங்கள் மற்றும் இரையைத் தேடி பாதுகாக்கப்பட்ட பகுதிகளை விட்டு சிங்கங்கள் வெளியே செல்லத் தொடங்கியுள்ளதால் விலங்குகள் மனிதர்களுடன் மிக நெருக்கமாக வந்துள்ளன.

மின்சாரம், ரயில் மற்றும் சாலை விபத்துக்கள் காரணமாக சிங்கம் இறந்த பல சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அவ்வப்போது சிங்கத்திற்கு விஷம் வைக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சிங்கங்களின் முக்கியத்துவம்
சிங்கங்கள் அவற்றின் வாழ்விடத்தின் உச்ச வேட்டையாடும் விலங்காகும். அவை புற்களை உண்டு வாழும் விலங்கினங்களின் எண்ணிக்கையையும் உயர்த்துகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

பலவீனமான இரையைக் குறிவைத்து வேட்டையாடுவதால் சிங்கங்கள் தங்கள் இரைகளின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இது மறைமுகமாக சிங்கங்கள் இரையாகக் கொள்ளும் விலங்கினங்களின் நோய் கட்டுப்பாட்டுக்கும் உதவுகிறது.

Views: - 17

0

0