ஒரு டன் எடையுள்ள உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி : ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவி மரியாதை

Author: Babu Lakshmanan
2 October 2021, 12:42 pm
ladakh1 - updatenews360
Quick Share

உலகிலேயே மிகப்பெரிய கதர் துணியிலான இந்திய தேசியக் கொடி லடாக்கில் நிறுவப்பட்டது.

அக்.,2ம் தேதியான இன்று காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது தியாகத்தையும், செயல்களையும் நினைவுகூர்ந்து, அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மகாத்மா காந்தியை கவுரவிக்கும் விதமாக, உலகின் மிகப்பெரிய கதர் துணியிலான தேசியக்கொடி லடாக்கில் உள்ள லே நகரில் நிறுவப்பட்டது. இந்தக் கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், ராணுவ முதன்மை தளபதி மனோஜ் முகுந்த் நரவணே ஆகியோர் பங்கேற்றனர்.

லடாக்கில் நிறுவப்பட்ட தேசியக் கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 1000 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 510

0

0