உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை இப்போது இந்தியாவில்..! மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக லே-மணாலி சுரங்கப்பாதை..!

16 September 2020, 6:46 pm
atal_tunnel_rohtang_pass_updatenews360
Quick Share

லே-மணாலி நெடுஞ்சாலையில் இமயமலையின் கிழக்கு பிர் பஞ்சால் பகுதியில் உள்ள ரோஹ்தாங் பாஸின் கீழ் மணாலியை லேயுடன் இணைக்கும் உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது. 

சுரங்கப்பாதை கடல்மட்டத்திலிருந்து 10,000 அடிக்கு மேல் உயரத்தில் உள்ளது. அடல் சுரங்கப்பாதை 10 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதை முடிக்க ஆரம்பத்தில் 6 ஆண்டுகளுக்கும் குறைவாகவே முதலில் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மணாலியை லேவுடன் இணைக்கும் அடல் சுரங்கப் பாதை : முக்கிய அம்சங்கள் 

 • இது 10,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயர்ந்த சுரங்கப்பாதை.
 • சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 9.02 கிமீ (5.6 மைல்).
 • மறைந்த மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயர் இந்த சுரங்கப் பாதைக்கு வைக்கப்பட்டுள்ளது.
 • இந்த சுரங்கப்பாதை மணாலிக்கும் லேக்கும் இடையிலான தூரத்தை 46 கி.மீ வரை குறைக்கும்.
 • இது பயண நேரத்தை 4 மணி நேரம் வரை குறைக்கும்.
 • சுரங்கப்பாதை கட்டுமானம் இரண்டு பக்கங்களிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டது. 
 • ரோஹ்தாங் பாஸ் முனையிலிருந்து சுரங்கப்பாதை கட்டுமானம் கடும் பனிப்பொழிவு காரணமாக ஒரு வருடத்தில் 4-5 மாதங்களுக்கு மட்டுமே அணுகக்கூடிய முறையில் இருப்பதால் சவாலான பணிகளில் ஒன்றாகும்.
 • சுரங்கப்பாதையின் உள்ளே ஒவ்வொரு 60 மீட்டர் தூரத்திலும் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
 • ஒவ்வொரு 500 மீட்டருக்கும் சுரங்கப்பாதையின் உள்ளே அவசரகால வெளியேற்றங்களும் உள்ளன.
 • ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் சுரங்கப்பாதைக்குள் தீயணைப்பு அமைப்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
 • கட்டுமானத்தின் போது தேவையான தளவாடங்களைக் கொண்டுவருவதும் கடினமான பணியாக இருந்தது.  இருபுறமும் 1 மீட்டர் நடைபாதை உட்பட சுரங்கப்பாதையின் அகலம் 10.5 மீட்டர் கொண்டுள்ளது.
 • இந்த சுரங்கப்பாதை 10,000 அடிக்கு மேல் உயரத்தில் 9 கி.மீ நீளமுள்ள ஒரு மூலோபாய அனைத்து வானிலை சுரங்கமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

லே-மணாலி சுரங்கப்பாதை முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு, முறையாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0