யானை மீது ஏறி யோகாசனம் : பாபா ராம்தேவ் கீழே விழுந்த வீடியோ வைரல்!! (வீடியோ)

Author: Udayachandran
13 October 2020, 7:51 pm
elepahnt Yoga - Updatenews360
Quick Share

உத்தரபிரதேசம் : யானை மீது ஏறி யோகாசனம் செய்த சாமியார் பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள குரு ஷார்தானந்தா ஆசிரமத்தில் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து யோகாசனம் செய்து காண்பித்தார். தனது சீடர்களுக்கு மூச்சுப் பயிற்சியான பிரணயாமம் செய்து காண்பித்தார்.

அப்போது திடிரென யானை அசையத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் யானை நகர முயற்சித்தது. அப்போத யானை மீது அமர்ந்து யோகாசனத்தில் ஈடுபட்ட பாபா ராம்தேவ் கீழே தவறி விழுந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் சில நாட்களுக்கு முன் யோகா குரு ராம் தேவ் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும்போது, சாலையில் விழுந்தது குறிப்பிடதக்கது.

Views: - 46

0

0