லவ் ஜிகாத்தில் ஈடுபடுவோருக்கு ஐந்து வருட சிறை தண்டனை..! உத்தரபிரதேச அரசு அவசர சட்டம் இயற்றியது..!
24 November 2020, 8:30 pmஉத்தரபிரதேச அரசு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லவ் ஜிகாத்துக்கு எதிரான மசோதாவை இன்று நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும். முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்த சில நாட்களுக்குப் பிறகு கட்டாய மத மாற்றங்களுக்கு எதிரான சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
சட்டவிரோத மத மாற்றங்களுக்கு எதிராக ஒரு அவசர சட்டத்தை அறிமுகப்படுத்த உ.பி. அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று மாநில அமைச்சரவை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறினார்.
சிறைத் தண்டனையைத் தவிர, கட்டாய மத மாற்றத்திற்கு ரூ 15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. எஸ்சி / எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களை மதம் மாற்றுபவர்களுக்கு, ரூ 25,000 அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சிங் கூறினார்.
முன்னதாக, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அரசாங்கம் லவ் ஜிகாத்தை சமாளிக்க ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்ததோடு, தங்கள் மகள்களையும் சகோதரிகளையும் மதிக்காதவர்களுக்கு இறுதிச் சடங்கு நடக்கும் சூழல் உருவாகும் என எச்சரித்திருந்தார்.
அருணாச்சல பிரதேசம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்கனவே மத மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வார தொடக்கத்தில், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள பாஜக அரசுகள் லவ் ஜிகாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றுவதாக அறிவித்திருந்தன.
லவ் ஜிகாத் தொடர்பாக அதிகரித்து வரும் சம்பவங்களை கருத்தில் கொண்டு மாநில சட்டமன்றத்தின் அடுத்த அமர்வில் மத சுதந்திரம் மசோதா 2020’ஐ அறிமுகப்படுத்தப்போவதாக சிவராஜ் சிங் சவுகான் அரசு தெரிவித்துள்ளது.
0
0