அடி தூள்..! தொடர்ந்து நான்காவது முறை..! இந்தியாவின் சிறந்த முதல்வர் யோகி தான்..! கருத்துக் கணிப்பில் தகவல்..!
23 January 2021, 9:03 pmஉத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் மார்ச் மாதம் முதல்வராக நான்கு ஆண்டுகள் நிறைவு செய்யும் நிலையில், அவர் தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியாவில் சிறந்த செயல்திறன் மிக்க முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியா டுடே குரூப்-கார்வி இன்சைட்ஸ் மூட் ஆஃப் தி நேஷன் ஜனவரி 2021 வாக்கெடுப்பில் மொத்த வாக்குகளில் 25 சதவீதத்தைப் பெற்று மிகச் சிறந்த முதலமைச்சர் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது, மிகவும் அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமாக கருதப்படும் உத்தரபிரதேசத்தில் பாஜகவிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது.
இந்தியாவின் இளம் வயது முதல்வர்களில் ஒருவரான யோகி ஆதித்யநாத், ஹத்ராஸ் கூட்டு பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை கையாண்டது மற்றும் சமீபத்திய லவ் ஜிகாத் சட்டத்தை அமல்படுத்தியது போன்ற விவகாரங்களில் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இருப்பினும், மூட் ஆஃப் தி நேஷன் கணக்கெடுப்பின் கடந்த ஆகஸ்ட் சர்வேயிலிருந்து, யோகி ஆதித்யநாத்தின் ஒப்புதல் மதிப்பீடுகள் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 54 சதவீதம் பேர் ஆதித்யநாத்தின் மதமாற்றத்திற்கு எதிரான சட்டத்தை ஆதரிக்கின்றனர்.
மார்ச் 2017’இல் பதவியேற்ற பின்னர், யோகி ஆதித்யநாத் பசு படுகொலைக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றுவது மற்றும் கலவரத்தின் போது பொது, தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மீட்பதற்கான சட்டத்தை நிறைவேற்றுவது போன்ற பல தைரியமான முடிவுகளையும் எடுத்தார். ஆனாலும், அவரது புகழ் அப்படியே உள்ளது.
இதற்கிடையே மொத்த வாக்குகளில் 14 சதவீத வாக்குகளைப் பெற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி ஜெகன் மோகன் ரெட்டியை முந்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் வீழ்ச்சியை சந்தித்தபோதிலும், நான்காவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் 6 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டி ஐந்தாவது இடம் பெற்றுள்ளார்.
0
0