நாள் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம்..! ரக்சா பந்தனை முன்னிட்டு யோகியின் ஸ்பெஷல் ஏற்பாடு..!

2 August 2020, 12:51 pm
yogi_adityanath_updatenews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு சிறப்பு பரிசாக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ரக்சா பந்தன் தினத்தையொட்டி, உத்தரபிரதேச மாநில சாலை போக்குவரத்துக் கழகம் தனது அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச சேவைகளை வழங்கும் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 2 நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 3 நள்ளிரவு வரை 24 மணி நேரம் இலவச பஸ் பயண வசதி கிடைக்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உ.பி. போலீசார் தீவிர ரோந்து செல்லவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட சமூக வழிகாட்டுதல்களை மக்கள் கடைபிடிப்பதை உறுதிசெய்யவும், வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தவும் உத்தரபிரதேச அரசு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரக்சா பந்தன் குறித்து எந்தவொரு பொது நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும் மக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

ரக்சா பந்தனைக் கருத்தில் கொண்டு அனைத்து இனிப்பு கடைகள் மற்றும் ராக்கி விற்பனையாளர்கள் இந்த வார இறுதியில் கடைகளைத் திறந்து வைக்க அனுமதிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.