தொழில் தொடங்கிய ஓராண்டிலேயே ரூ.10 கோடி வருவாய் ஈட்டிய இளம் தொழிலதிபர்…!!

3 November 2020, 6:19 pm
WhatsApp Image 2020-11-03 at 6.04.11 PM
Quick Share

பட்டயக் கணக்காராக பல்வேறு எம்என்சி நிறுவனங்களில் பணிபுரிந்த அமித், அந்த வேலையில் நிம்மதியாகப் பணியாற்ற முடியவில்லை. எனவே, தொழில்முனைவராக உருவாக வேண்டும் என்று அதிரடியாக முடிவெடுத்தார். தனது லட்சியத்தில் வெற்றியும் பெற்றார். இன்று மிக வேகமாக வளர்ந்துவரும் இளம் தொழில்முனைவோராக இருக்கிறார். சாதிக்கத் துடிக்க நினைக்கும் இன்றைய இளைஞர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார்.

நிரந்தரமாக வளர்ச்சியடையும் தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சிந்திக்கும் போது இரும்பு, எஃகு வியாபாரத்தில் இறங்குவதென்று முடிவெடுத்தார். முடிவெடுத்ததோடு மட்டுமன்றி களத்திலும் இறங்கி கடுமையாக உழைத்து ஓராண்டில் ரூ.10 கோடிக்கு வியாபாரம் செய்து தனது 25ஆம் வயதிலேயே ஓர் வியத்தகு சாதனையையும் படைத்துவிட்டார். இதுகுறித்து அவர் பேசியபோது, ‘நான் புதிதாக ஓர் துறையைத் தேர்ந்தெடுத்து பணிபுரிய விரும்பினேன். ஆனால், அந்தத் துறையானது நிலையான தொடர்ந்து வளர்ச்சியடையும் துறையாக இருக்கவேண்டும் எனக் கருதினேன். அப்போதுதான் இந்தியாவில் இரும்பு, எஃகு பொருள்கள் தயாரிப்பு துறைக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும் என நான் அறிந்தேன். மேலும், இத்துறை சீராக வளர்ச்சியடைந்து வருவதையும் நான் கண்கூடாக பார்த்தேன்,” என்கிறார்.

இதுதான் நான் செய்யும் தொழில் என முடிவு செய்து விட்டேன். ஆனால் என் முன் மிகப்பெரிய சவால் ஒன்று காத்திருந்தது. அதுதான் பெரிய அளிவிலான முதலீடு. இதை சமாளிக்க எனது சேமிப்பிலிருந்து ரூ. 30 லட்சம் முதலீடு செய்தேன். மேலும், எனது குடும்பத்தினரின் உதவியுடன் 2018ல் பெங்களூரில் கேசர் இன்டர்நேஷனலைத் தொடங்கினேன் என்கிறார்.

கட்டுமான நிறுவனங்களுக்கு அவர்கள் விரும்பிய சரியான வகையிலான எஃகு தயாரிப்புகளை பெற முடியவில்லை என்பது பெரிய குறையாக இருப்பதை அறிந்தேன், எனவே, நான் எஃகு உற்பத்தியைத் தொடங்கத் தேவையில்லை, அவர்களுக்குத் தேவையான பொருள்களைத் தரமாக செய்து தருவதே போதும் என உணர்ந்தேன். எஃகு கோணங்கள், ஜாய்ஸ்டுகள், விட்டங்கள், சாலைகள், பார்கள் போன்ற சரியான எஃகு தயாரிப்புகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் கட்டுமான நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு நிறுவனத்தையும் தொடங்க முடியும் என அமித் முடிவெடுத்துள்ளார்.

இதையடுத்து, ‘கேசர் இன்டர்நேஷனல்’ பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எஃகு மூலங்களையும், கட்டமைப்பு எஃகு தயாரிப்புகளை தயாரிக்க ரோலிங் மில்களை வேலைக்கு அமர்த்தியது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான தயாரிப்புகளை வழங்கியது. பிரபல கட்டுமான நிறுவனங்களான பிரெஸ்டீஜ் மற்றும் சோபாவுக்கும் எஃகு தயாரிப்புகளை விற்பனை செய்தது. இவ்வாறு பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பெற்றதால், கேசர் இன்டர்நேஷனல் முதல் ஆண்டிலேயே ரூ.10 கோடி வருவாயைப் பெற்றது.

”எங்கள் ஆலைகள், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் வார்ப்புகளைத் தயாரித்து வழங்குகின்றன. எனவே இத்தயாரி்ப்புகளை கட்டுமான நிறுவனங்களுக்கு மட்டுமன்றி, கப்பல் தயாரிப்பாளர்களுக்கும் வழங்குகிறோம்,” என்கிறார் அமித். மேலும், எந்தவொரு வியாபாரத்தையும் தொடங்க பெங்களூர் சிறந்த சந்தை என்பதால்தான் பெங்களூரில் இத்தொழிலைத் தொடங்கினேன் என்கிறார். இப்போதெல்லாம், முன்பை விட வேகமாக உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. முன்பு 20 தளங்களுக்கு மேல் இருந்த கட்டிடங்கள் கட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது. ஆனால் எஃகு ஜாயின்டுகள் மூலம், அவற்றை மிக வேகமாக முடிக்கமுடியும். இங்குதான் நாங்கள் பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு சரியான எஃகு தயாரிப்புகளைப் பயன்படுத்தி கட்டிடத்தை வேகமாக உருவாக்க உதவுகிறோம் என்கிறார்.

Views: - 18

0

0