Viral Video:திருமண விழாவில் பரபரப்பு..! ஒரு நிமிடம் நடனத்தை நிறுத்திய பெண்..! துப்பாக்கியால் சுட்டுத்தள்ளிய போதை ஆசாமி..!

6 December 2019, 3:18 pm
Quick Share

சித்ரகூட்: உத்தரப்பிரதேசத்தில் திருமண விழா சில விநாடிகள் தமது நடனத்தை நிறுத்திய இளம்பெண் சுடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள சித்ரகூட் என்ற பகுதியில் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியில் ஒரு திருமண விழாவில், ஒரு குழுவினர் நடனமாடி கொண்டிருந்தனர்.

அவர்களுடன் ஒரு இளம்பெண் ஒருவரும் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த ஒருவர் சப்தம் எழுப்பி கொண்டே இருந்தார்.

ஒரு நிமிடம் நடனம் ஆடிய அந்த பெண் திடீரென தமது ஆட்டத்தை நிறுத்தி உள்ளார். அப்போது அந்த மதுபோதை நபர், தமது கையில் துப்பாக்கியை காட்டி ஆடு, இல்லை என்றால் சுட்டுவிடுவேன் என்று மிரட்டுகிறார்.

அவர் அருகில் இருப்பவரும் சுட்டுவிடு என்று உசுப்பேற்ற, எதிர்பாராதவிதமாக அவரும் சுட்டுவிடுகிறார். நொடியில் அந்த பெண்ணின் முகத்தில் குண்டுபாய அலறி அடித்து விழுகிறார்.

காயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழக்கு பதிவு செய்த போலிசார் அந்த துப்பாக்கி நபரை தேடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி இருக்கிறது.