கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்வு: 37 பேருக்கு தொற்று உறுதி..!!

Author: Aarthi Sivakumar
22 July 2021, 4:11 pm
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் நோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 37 ஆக அதிகரித்துள்ளது.

கேரளாவில் கோவிட் வைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் நோயும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது,

latest tamil news

கேரளாவில் பாறசாலை பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு முதலில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்பு மேலும் சிலருக்கு நோய் பரவியது.

இதையடுத்து நோய் அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் நேற்று முன்தினம் வரை 37 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

zika virus symptoms, treatment explained

நேற்று மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து கேரளாவில் இதுவரை 42 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 179

0

0