விபச்சார அழகிகளுடன் தொடர்பு… பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை கைது செய்ய வாரண்ட்? மனைவி கொடுத்த பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2023, 5:07 pm
Shami - Updatenews360
Quick Share

விபச்சார அழகிகளுடன் தொடர்பு… பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை கைது செய்ய வாரண்ட்? மனைவி கொடுத்த பரபரப்பு புகார்!!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, 2014ஆம் ஆண்டு ஹசீன் ஜகான் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆயிரா ஷமி என்ற மகள் உள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஷமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவரது மனைவி கூறி வருகிறார்,. முகமது ஷமியின் மூத்த சகோதரர் மீது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என்றும் கொலை செய்ய முயன்றார் என்றும் புகார் அளித்தார். மேலும் முகமது ஷமிக்கு பல்வேறு பெண்களிடம் தொடர்பு இருப்பதாகவும் புகார் கூறினார்

கமது ஷமி – ஹசின் ஜகான் விவாகரத்து கோரிய வழக்கு கொல்கத்தா குடும்பநல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. 2018 ஆம் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஷமி தன்னிடம் வரதட்சணை கேட்பதாக கூறி, அவரது மனைவி ஹசின் ஜகான் வழக்கறிஞர்கள் தீபக் பிரகாஷ், வழக்கறிஞர் நச்சிகேதா வாஜ்பாய் மற்றும் திவ்யங்னா மாலிக் வாஜ்பாய் ஆகியோர் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அதில் ஷமி மீது பல்வேறு பரபரப்பு புகார்களை அடுக்கியுள்ளார். அவர் தனது மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக ஷமி மீதான கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என புகார் அளித்துள்ளார். அத்துடன், தனது கணவர் முகமது ஷமி தன்னிடம் வரதட்சனை கேட்டு மோசமாக கொடுமை செய்தார். பல பாலியல் தொழிலாளிகளுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டிருந்தார்.

இதற்காக தனியாக ஒரு மொபைல் போன் வைத்துக்கொண்டு பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு உறவில் இருந்தார். கிரிக்கெட் விளையாட சக அணி வீரர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது கூட இந்த உறவுகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார்.

அவரை கைது செய்ய வாரண்ட் பிறபிக்க கோரி உள்ளார். ஏற்கனவே, முந்தைய வழக்கில் தன்னை பிரிந்திருக்கும் கணவர் ஷமி ஜீவனாம்சம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதன்படி, கொல்கத்தா நீதிமன்றம் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜகானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. ரூ.1.30 லட்சத்தில் ரூ.50,000 ஹசின் ஜகானின் தனிப்பட்ட ஜீவனாம்சமாகவும், மீதமுள்ள ரூ.80,000 அவருடன் தங்கியிருக்கும் மகளின் பராமரிப்புச் செலவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஜீவனாம்சம் தொகை தனக்கு திருப்திகரமாக இல்லை என ஹசின் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Views: - 1069

1

1