ஆசிய கோப்பை கிரிக்கெட்… இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அறிவிப்பு ; மீண்டும் அணிக்கு திரும்பிய கோலி..!!!

Author: Babu Lakshmanan
8 August 2022, 9:40 pm
Quick Share

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இலங்கையில் பொருளாதார சிக்கல் நீடிப்பதால், கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.

இந்தப் போட்டி தொடரில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 5 அணிகள் ஆடுகின்றன. ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் மற்றொரு அணி ஆகிய 3 அணிகளும் உள்ளன. பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ரோகித் ஷர்மா தலைமையிலான அணியில் கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பண்ட், தீபக் ஹுடா, தினேஷ் கார்த்திக், ஹர்திக், ஜடேஜா, அஸ்வின், சஹால், பிஸ்னோய், புவனேஸ்வர், அர்ஷ்தீப்சிங், ஆவேஷ் கான் ஆகியோருக்கு இடம் பிடித்துள்ளனர். ஸ்ரேயாஷ் ஐயர், அக்ஷர் படேல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் கூடுதல் வீரர்களா உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாத விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

Views: - 1134

0

0