இலக்கை அடைய முடியாமல் திணறிய பெங்களூரு : அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னேறிய பஞ்சாப்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 11:38 pm
Punjab Won - Updatenews360
Quick Share

ஐபிஎல் 15வது சீசன் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.இன்று நடைபெறும் 60வது லீக் போட்டியில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 210 ரன்கள் இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது.

முதலில் களமிறங்கிய விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் நிதானமாக விளையாடினார். இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 20 ரன்கள் எடுத்தார் .

இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்களை அவர் கடந்துள்ளார் .இதனால் ஐபிஎல் தொடரில் 6,500 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார் .

டூபிளசில் 10 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த பட்டிடர் 26 ரன்னில் வெளியேறினார். மேக்ஸ்வெல் மட்டும் 35 ரன்கள் எடுக்க தினேஷ் கார்த்திக் 11 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 155 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 12 புள்ளிகளை பெற்று 6 வது இடத்திற்கு முன்னேறியது.

Views: - 1279

0

0