சிக்ஸர் மழையை பொழிந்த சிஎஸ்கே… இமாலய இலக்கை நோக்கி மிரட்டும் ஆர்சிபி : 3வது வெற்றி யாருக்கு?!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2023, 10:03 pm
RCB Vs CSK - Updatenews360
Quick Share

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் டூ பிளஸிஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனால் சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் – டெவோன் கான்வே தொடக்கம் கொடுத்தனர். ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, ரஹானே – கான்வே இணை முதல் சில ஓவர்கள் நிதானம் காட்டியது.

பின்னர் 4வது ஓவர் முதல் அதிரடியை தொடங்கிய நிலையில், இளம் வீரர் விஜய்குமார் பந்துவீச்சில் ரஹானே ஒரு இமாலய சிக்சரை விளாசினார். தொடர்ந்து பார்னல் வீசிய 6வது ஓவரில் ரஹானே அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகள் விளாசினார்.

இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 53 ரன்கள் சேர்த்தது. இதனைத் தொடர்ந்து சுழல் பந்துவீச்சாளர்களை ஆர்சிபி அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. மேக்ஸ்வெல் மற்றும் ஹசரங்கா இருவரையும் சிக்சரையும் அடித்து சிஎஸ்கே வீரர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து ரஹானே 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதேபோல் ஓவரில் கான்வே அரைசதம் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து ஸ்பின்னர்களை அட்டாக் செய்வதற்காக ஷிவம் துபே களமிறக்கப்பட்டார். அவர் களமிறங்கியது முதல் ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும் சிக்சருமாய் பந்துகள் பறந்து கொண்டே இருந்தது.

ஷிவம் துபே அடித்த ஒரு சிக்சர் 101 மீட்டர் பறக்க, மற்றொரு சிக்சர் 111 மீட்டர் தூரம் சென்றது. தொடர்ந்து 15வது ஓவரை வீசிய விஜய்குமார் பந்துவீச்சில் 19 ரன்கள் சேர்க்கப்பட்டது.

பின்னர் ஹர்சல் படேல் வீசிய ஓவரில் கான்வே 45 பந்துகளுக்கு 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷிவம் துபே – ராயுடு இணை சேர்ந்தது. ஆனால் யார் ஆட்டமிழந்தாலும் சிக்சர் அடிப்பது உறுதி என்று முடிவு அடித்த ஷிவம் துபே 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

ஆனால் மீண்டும் சிக்சர் அடிக்க முயன்று சிக்சர் லைனில் கேட்ச் பிடிக்கப்பட்டு 52 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த மொயின் அலி சிக்சர் அடித்து கணக்கை தொடங்க, 17 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் சேர்த்தது.

பின்னர் அடுத்த ஓவரில் 14 ரன்கள் எடுத்து ராயுடு ஆட்டமிழக்க, 19 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 210 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை ஹர்சல் படேல் பந்துவீச வந்தார். அந்த ஓவரில் இரு நோ-பால் வீசினார்.

இதனால் 2 பந்துகளோடு ஹர்சல் படேல் பந்துவீச அனுமதிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கடைசி 4 பந்தை வீச மேக்ஸ்வெல் பந்தை வாங்கினார். அந்த 4 பந்துகளில், முதல் பந்தில் சிக்சர் அடித்த ஜடேஜா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களம் புகுந்த தோனி, ஒரு ரன் மட்டுமே எடுத்து ஸ்ட்ரைக்கை மொயின் அலியிடம் கொடுத்தார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 226 ரன்கள் குவித்தது.

227 என்ற இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் ஆடத்தொடங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர். சிஎஸ்கேவின் பந்துவீச்சாளர் ஆகாஷ் சிங் விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தார்.

அடுத்த லாம்ரோர் டக் அவுட் ஆனார். தேஷ்பாண்டே இந்த விக்கெட்டை கைப்பற்றினார். 7 ஓவரில் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது.

Views: - 266

0

0