பிசிசிஐ-யை காப்பாற்ற பொய் சொன்னாரா டிராவிட்.? வெளிநாட்டு போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதிக்காததற்கு காரணம் இதுவா?

Author: Udayachandran RadhaKrishnan
12 November 2022, 5:13 pm
Dravid - Updatenews360
Quick Share

டி20 உலக கோப்பையில் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹெல்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தார்.

இதற்கு அலெக்ஸ் ஹெல்ஸ், பிக் பேஷ் தொடரில் விளையாடிய அனுபவம் தான் காரணம் என்று ஜாஸ் பட்லர் கூறினார்.

இதனால் இந்திய வீரர்களை வெளிநாட்டு தொடர்களில் ஏன் பிசிசிஐ அனுமதிப்பதில்லை என்று பத்திரிகையாளர் ஒருவர் பயிற்சியாளர் டிராவிட்டிடம் கேட்டார்.

அதற்கு டிராவிட் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடரின் போது தான் இந்தியாவில் உள்நாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. ரஞ்சி கிரிக்கெட்டில் எங்கள் அணி வீரர்கள் விளையாடுகிறார்கள். நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டிய சூழல் இருக்கிறது.

இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்லது. உள்நாட்டு போட்டிகளில் விளையாட முடியாமல் போனால் வெஸ்ட் இண்டீஸ்க்கு ஏற்பட்ட கதை தான் எங்களுக்கும் ஏற்படும் என்று கூறினார்.

டிராவிட்டின் இந்த பேச்சு பார்ப்பதற்கு சரியாக சொல்லி இருக்காரு என்பது போல் தோன்றும். ஆனால் இது பிசிசிஐயை காப்பாற்ற அவர் சொன்ன பொய் என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறதா?.

பிக் பேஷ் போன்ற தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்கள் விளையாட முடியாமல் போனதற்கு பிசிசிஐயின் பயம்தான் முக்கிய காரணம். அதாவது பிசிசிஐ பொறுத்தவரை ஐபிஎல் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும்.

இந்திய வீரர்கள் மற்ற வெளிநாட்டுத் தொடர்களில் விளையாடினால் ஐபிஎல் மீதான மவுஸ் குறைந்துவிடும் என்பது இதற்கு முக்கிய காரணம். அடுத்தது இரண்டாவது காரணமாக ராகுல் டிராவிட் ரஞ்சிப் போட்டிகளில் சீனியர்கள் விளையாட வேண்டும் என்று கூறுகிறார்.

ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற நட்சத்திர சிறுவர்கள் ரஞ்சிப் போட்டியில் கால் எடுத்து வைத்து பல ஆண்டுகள் ஆகிறது.இதனால் இதுவும் டிராவிட் சொன்ன பொய்களில் இதுவும் ஒன்று.

இங்கிலாந்தில் தொடர்ந்து நாம் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்ததை அடுத்து சீனியர் வீரர்களை கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ அனுமதி அளித்தது.

இதன்மூலம் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அனுபவம் நமது வீரர்களுக்கு கிடைத்தது. இதே போல் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களில் இந்திய வீரர்களை பிசிசிஐ அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய வீரர்கள் அனைவரையும் அனுப்ப சொல்லவில்லையாம். குறிப்பாக டி20 போட்டிகளுக்கு இவர் தேவைப்படுவார் என்று பிசிசிஐ நினைக்கும் நான்கு, ஐந்து வீரர்களை மட்டும் இதுபோன்று வெளிநாட்டு தொடர்களில் அனுப்பி விளையாட வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அடுத்த உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெறுகிறது. இதனால் ஆகஸ்ட் மாசம் கரபியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெறும். அப்போது சஞ்சு சாம்சன், இசான் கிசான் போன்ற வீரர்களை அனுப்பி அங்கு விளையாட வைத்தால் அவர்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும்.

ஆனால் பி சி சி ஐ இந்திய கிரிக்கெட்டில் இருந்து நீங்கள் ஓய்வு பெற்றால் மட்டும் தான் வேறு நாட்டில் நடைபெறும் கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று விதியை வைத்துள்ளது.

ராபின் உத்தப்பா போன்ற வீரர்கள் எல்லாம் இதற்காகத்தான் ஓய்வு பெற்றார்கள். தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தவிர எந்த ஒரு பெரிய கிரிக்கெட் தொடரிலும் விளையாடவில்லை.

அது போன்ற வீரையாவது பிக் பேஷ் தொடரில் விளையாட அனுப்பி இருந்தால் இந்தியாவுக்கு அது சாதகமாக அமைந்திருக்கும். வியாபார நோக்கத்திற்காக பிசிசிஐ சுயநலமாக எடுத்த முடிவு இந்தியாவுக்கு சறுக்களை கொடுத்திருக்கிறது .

Views: - 373

0

0