‘மெர்சலாயிட்டேன்’… வங்கதேச வீரரின் விக்கெட்டை பந்தாடிய வேகம் ; டாக்கா போட்டியில் அசுரனாக மாறி பந்தை வீசும் மாலிக்..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
7 December 2022, 1:09 pm
Quick Share

வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பவுலர் உம்ரான் மாலிக் எடுத்த விக்கெட் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டாக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள், வங்கதேச அணியை திணறடித்தனர்.

வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அனமுல் (11), லிட்டன் தாஸ் (7) ஆகியோரின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். இதைத் தொடர்ந்து, நிதானமாக ஆடி வந்த ஷாண்டோவின் விக்கெட்டை உம்ரான் கைப்பற்றியது சமூகவலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது.

இந்திய அளவில் அதிக வேகம் வீசக்கூடிய பவுலரான மாலிக், ஷாண்டோவின் விக்கெட்டை கைப்பற்றிய பந்தை 151 KMPH வேகத்தில் வீசியுள்ளார். அதிவேகமான பந்து பட்டதில் ஸ்டாம்ப் தெறித்துக் கொண்டு போய் விழுந்துள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் பாராட்டி வருகின்றனர்.

Views: - 540

8

1