பேட்டிங்… பவுலிங் என அனைத்திலும் சூப்பர்… உள்ளூரில் வெற்றிகளைக் குவிக்கும் ரோகித் : இலங்கையை ஒயிட்வாஷ் செய்து அசத்தல்

Author: Babu Lakshmanan
14 March 2022, 7:40 pm
Quick Share

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இலங்கை அணி பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. இதைத் தொடந்து, 2 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடின. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Image

இதைத் தொடர்ந்து, இந்தியா – இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரூவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 252 ரன்களும், இலங்கை 109 ரன்களும் எடுத்தது. 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 303 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதனால், 447 ரன்கள் இலங்கை அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அதன்படி, களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே 107 ரன்களும், குஷால் மெண்டிஸ் 54 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்ததால் இலங்கை அணி 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், 238 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியது.

அதேவேளையில், சொந்த மண்ணில் வெற்றிகளைக் குவிக்கும் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு ஒயிட்வாஷ் செய்யப்பட்ட அணிகளின் விபரம் :
3-0 vs NZ (T20I)
3-0 vs WI (ODI)
3-0 vs WI (T20I)
3-0 vs SL (T20I)
2-0 vs SL (Tests)

Views: - 1194

0

0