உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நமிபியா : ஒரே ஒரு வார்த்தையில் பாராட்டிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 October 2022, 5:24 pm
Sachin - Updatenews360
Quick Share

டி20 உலககோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணி , கத்துக்குட்டி அணியான நமிபியாவிடம் இன்று அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் கத்துக்குட்டி அணியுடனான நமிபியாவை இலங்கை அணி எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.

ஒரு கட்டத்தில் நமிபியா அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த ஜென் பிராலிங், மற்றும் ஜேஜே ஸ்மிட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதனால் நமிபியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை சேர்த்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஆரம்பம் முதல் தடுமாறியது. நமிபியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இறுதியில் இலங்கை அணி 19-வது ஓவரில் 108 ரன்களில் சுருண்டது.

இதன் மூலம் நமிபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியை நமிபியா அணி வீழ்த்தியுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியமடைய செய்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் நமிபியா அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நமிபியா அணியை பாராட்டி டுவிட் செய்துள்ளார்.

இது குறித்து சச்சின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இன்று நமீபியா அணி, தங்கள் அணியின் பெயரை கிரிக்கெட் உலகம் நினைவில் கொள்ளுமாறு கூறியுள்ளதாக” பதிவிட்டுள்ளார்.

Views: - 553

0

0