ஷிவம் துபேவுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா : ஒரே நாளில் ரெண்டு குட்நியூஸ்.. ரசிகர்கள் வாழ்த்து மழையால் மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 2:21 pm
Shivam Dube - Updatenews360
Quick Share

இன்று 2வது நாள் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ரூ.4 கோடிக்கு ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

நடப்பாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய ஏலத்தில் தொடக்கத்தில் குஜராத், ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பங்கேற்றது. அதாவது கடந்தஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ஷிவம் துபேவை ரூ.4 கோடிக்கு சென்னை வாங்கியது.

பஞ்சாப்புடன் போட்டி நிலவி வந்த நிலையில், இன்றைய தினத்தின் முதல் வீரராக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவை வாங்கியுள்ளது. ஏற்கனவே, தமிழக வீரர் விஜய் சங்கரை எடுக்க முயற்சி செய்த சென்னைக்கு எதிர்பார்த்த தொகையில் கிடைக்காததால், ரூ.4 கோடிக்கு ஷிவம் துபேவை தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

இந்த நிலையில் ஷிவம் துபே மனைவிக்கு ஆண் குழந்தை இன்று பிறந்துள்ளது. இதை அவர் தனது ட்விட்டரில் தெரிவித்த 2 மணி நேரத்தில் சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குழந்தை பிறந்தவுடன் உங்களுக்கு அடித்தது லக் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Views: - 1270

0

0