அரைசதம் அடித்த விராட் கோலியின் கொண்டாட்டத்தால் வந்த பிரச்சனை… ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த கோலியின் குடும்பம்..!!

Author: Babu Lakshmanan
24 January 2022, 2:11 pm

சென்னை : தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிறகு, விராட் கோலிக்கு பெரும் தலைவலி உருவாகியுள்ளது.

இந்தியா – தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சொற்ப ரன்னில் வெற்றியை இழந்தது. இதில், இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு, விராட்கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 பந்தில் 5 பவுண்டரியுடன் 65 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் வாமிகாவும் கண்டு களித்தனர்.

அவர் அரைசதம் அடித்த போது தனது குழந்தைக்கு இந்த அரைசதத்தை அர்ப்பணிப்பது போன்ற செயலில் ஈடுபட்டார். அது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது, அவரது மனைவி மற்றும் குழந்தையின் முகம் மைதானத்தில் இருந்த கேமிராவில் பதிவாகியது. இதன்மூலம், கோலியின் முகம் முதல்முறையாக வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனை அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுத்து, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கோலி மற்றும் அனுஷ்கா தம்பதிக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இருவரும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். அதில், “நேற்று போட்டி நடைபெற்ற மைதானத்தில் எங்களது குழந்தையின் முகம் புகைப்படம் எடுக்கப்பட்டு சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டதை அறிந்தோம். கேமரா எங்களது குழந்தையின் பக்கம் இருந்ததை நாங்கள் கவனிக்கவில்லை. எங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்டது. ஏற்கனவே கேட்டுக் கொண்டது போல, வாமிகாவை புகைப்படம் எடுக்கவோ, எடுத்ததை பொது வெளியில் பகிரவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். நன்றி” என தெரிவித்துள்ளனர்.

  • Amala Paul viral video 2024 நடுக்கடலில் அமலாபால்..சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்…வைரலாகும் வீடியோ..!
  • Views: - 6484

    0

    0