27 வருட வரலாற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த வெஸ்ட் இண்டிஸ்.. ஆஸிக்கு பலத்தை நிரூபித்த கேப்டன் பிராத்வைட்!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2024, 7:59 pm
Aus
Quick Share

27 வருட வரலாற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த வெஸ்ட் இண்டிஸ்.. ஆஸிக்கு பலத்தை நிரூபித்த கேப்டன் பிராத்வைட்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. அதில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த பட்டியலில் ஏற்கனவே 56.25% புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி சில புள்ளிகளை இழந்துள்ளது. இருப்பினும் அந்த அணி 55 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதல் புள்ளிகள் பெற்று 1 இடம் முன்னேறி 7-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து ஒரு இடம் சரிந்து 8-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது.

ஆஸி உடனான வெற்றிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வெஸ்ட் இண்டிஸ் அணி கேப்டன் பிராத்வைட், எங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறினார். அதுவே எங்களுக்கு உத்வேகமாக இருந்தது. நாங்கள் பரிதாபகரமானவர்கள் அல்ல என்பதை உலகுக்குக் காட்ட விரும்பினோம். அவரிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த பலம் உங்களுக்கு போதுமா ? என தனது தோள்பட்டையை மடக்கி காண்பித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

….

இந்த பலம் போதுமா? ஆஸிக்கு எதிராக வரலாற்று சாதனையை படைத்த வெஸ்ட் இண்டிஸ் : 27 வருட சாதனை முறியடிப்பு!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டிஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அதே போல இரண்டாது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டிஸ் அணி, முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து சொதப்ப, ஹாட்ஜ் மற்றும் ஜோஸ்வா டி சில்வா, சன்கிளையர் ஆகியோர் நிதானமாக ஆடி அரைசதம் அடித்தனர்.

311 ரன்கள் எடுத்ததையடுத்து ஆஸி., வீரர்கள் முதல் இன்னிங்சில் களமிறங்கினர். வெஸ்ட் இண்டில் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலெக்ஸ் கேரி மற்றும் கவாஜா அபாரமாக ரன் சேர்த்தனர். 9 விக்கெட் இழந்து 289 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 22 ரன்கள் முன்னிலையில் களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணியினர், இரண்டாவது இன்னிங்சில் 193 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸி., அணிக்கு வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.

நட்சத்திர வீரர்கள் சொதப்பினாலும், ஸ்மித் இறுதி வரை ஆட்டமிழக்காமல் பொறுமையாக ஆடினார். இறுதியில் 20 ரன்கள் தேவை என்ற போது 2 விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்தன. ஆனால் விடாமல் தொடர் கடின உழைப்பால் வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள் அபாராமாக பந்துவீசி ஆஸி அணியை 207 ரன்களில் சுருட்டினர்.

8 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது. 27 வருட தோல்விக்கு வெஸ்ட் இண்டிஸ் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டிஸ் கேப்டன் பிராத்வைட், ஆஸி முன்னாள் வீரர் எங்களை பார்த்தால் பரிதாபமாக உள்ளதாக கூறியிருந்தார். அவர் சொன்ன வார்த்த்தைகள் எங்களை உத்வேகப்படுத்தியது. இந்த பலம் போதுமா என கையை மடித்து வைத்து காட்டினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Views: - 769

0

0