சபரிமலை மாதிரி அயோத்தியில் நடக்கல… இதுதான் ரெண்டு மாநில அரசுகளுக்கும் வித்தியாசம் ; வானதி சீனிவாசன்..!!

Author: Babu Lakshmanan
29 January 2024, 8:58 am
Quick Share

கோவை மாநகரம் தூய்மையாக நல்ல பட்டியலில் இருந்ததாகவும், ஆனால் தற்பொழுது இந்த நகரம் குப்பை நகரமாக மாறிக்கொண்டு உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை செட்டி வீதி பகுதியில் புதிதாக போடப்பட்ட தார் சாலை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பிரதமர் மோடியின் மான் கீ பாத் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- கோவை தெற்கு தொகுதியில் குறிஞ்சி கார்டன் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். தேர்தலின் போது பகுதி மக்கள் முக்கிய கோரிக்கையாக சாலை வசதி செய்து கொடுக்க கூறியது. தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின்பாக அந்தப் பகுதியில் அனைத்து சாலைகளும் செப்பனிடப்பட்டு, புதிய தார் சாலைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கோவையில் பொறுத்தவரை பொதுமக்களுக்கு குப்பைகளை சரியாக அகற்றாதது குறையாக உள்ளது. கோவை மாநகரம் தூய்மையாக நல்ல பட்டியலில் இருந்தது. ஆனால் தற்பொழுது இந்த நகரம் குப்பை நகரமாக மாறிக்கொண்டு உள்ளது. குப்பைகளை சரிவர தூய்மைப்படுத்தாததால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவுகிறது.

கோவை மாநகராட்சியின் பொது சுகாதாரம் என்பது மிக மோசமாக சென்று கொண்டுள்ளது. உடனடியாக கோவை மாநகராட்சி மேயர் குப்பைகளை அகற்றுவதற்கும், தூய்மையான பகுதியாக கொண்டுவர பணிகளை முடித்து விட வேண்டும். கோவை என்பது இங்குள்ள மக்களுக்கு வாழ்வதற்கான இடம் மட்டுமல்ல லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையை கொடுக்கின்ற இடமாகவும் உள்ளது.

அதிகமாக பொருளாதார போக்குவரத்து வசதிகள் இருக்கின்றதாகவும், சென்னைக்கு அடுத்தபடியாக அதிக முதலீடுகளை ஈற்கின்ற விதமாக கோவை மாறி கொண்டுள்ளது. இப்படி இருக்கின்ற சூழ்நிலையில் கோவை மக்களின் தூய்மை பணிகள் என்பது எந்த இடத்திலும் கெட்ட பெயரை கொண்டு வராமல் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி இந்த குப்பைகளை தீவிர கவனம் செலுத்தி தூய்மையை பேண வேண்டும் எனக்கு கேட்டுக் கொண்டார்.

கேலோ இந்தியா நிகழ்ச்சிக்கான விளம்பர பதாகைகளில் பாரத பிரதமரின் புகைப்படங்கள் இல்லை. தமிழக அரசு அதனை மாற்ற வேண்டும். பிரதமரின் புகைப்படங்களை எல்லா இடங்களிலும் வைக்க வேண்டும். அப்படி அவர்கள் வைக்காவிட்டால் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அந்த விளம்பர போர்டுகளில் அவர்கள் வைப்பார்கள். அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்காக காத்திருக்கின்றோம். அவர்கள் மேலும் காலதாமதம் செய்தால் அந்தந்த மாவட்ட தலைவர்கள் உடன் நிர்வாகிகள் புகைப்படங்களை வைப்பார்கள்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிலை பிரதிஷ்டத்திற்கு பின்பாக, அயோத்திக்கு செல்ல பல்லாயிரக்கணக்கான மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்காக இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கிக் கொண்டு உள்ளனர். மேலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து ஆறு நாட்களுக்கு ஒரு முறை ரயில் செல்ல உள்ளது. அதற்கு பதிவு செய்கின்ற பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அயோத்தி செல்கின்ற பக்தர்களுக்கு சிறப்பான தரிசனம் மேற்கொள்ள அனைத்து வசதிகள் செய்து அங்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்கள் அங்கு சென்று வர உணவு தங்குமிடம் அனைத்தும் ரூபாய் 2,500-க்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டு அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொடுப்பார்கள்.

இத்தனை லட்சக்கணக்கான மக்கள்கள் வருகின்ற இடத்தில் எந்த ஒரு மோசமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை. சபரிமலை நடந்து செல்கின்ற பக்தர்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காத கம்யூனிஸ்ட் அரசு, 12 மணி நேரம் வரிசையில் காக்க வைக்கிறது.

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு செல்கின்ற பக்தர்கள் எந்த குறையும் கூறவில்லை. தர்மத்தை மதிக்கின்ற அரசாங்கம் அங்கு நடக்கிறது. கோவில் பக்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய தலைவர்கள் உள்ளனர். இவர்கள் இருக்கின்ற வரை எத்தனை கோடி மக்கள் இறைவனை தரிசிக்க வந்தால் ஏற்பாடு செய்ய முடியும். இதுதான் அரசுகளுக்கு உள்ள வித்தியாசம்,

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழகத்தில் நடத்தினர். சுமார் ஐந்தரை லட்சம் கோடி முதலீடுகள் என்றும், அதில் வேலை வாய்ப்பு உள்ளதாக கூறினார்கள். ஆனால் அதில் பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்டது. ஏற்கனவே இருக்கின்ற நிறுவனங்களை திரும்பவும் கொண்டு வந்து புதிய ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

வேகமாக வளர்ந்து கொண்டு உள்ள மாநிலமாகவும் உள்ளது. அதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். தொழில் கல்விகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். விழிப்புணர்வு வழங்க வேண்டும். அது போன்ற இல்லாமல், தொழில் நிறுவனங்களில் பணியாற்ற வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

அவர்கள் பேசும் ஹிந்தி மொழியை, அவர்கள் உண்ணும் உணவை கேவலப்படுத்துகின்றனர். குறைந்த செலவில் பணிகளை செய்வதற்கு அவர்களை அழைத்து வருகின்றனர். இதுபோன்ற முரண்பாடுகளை கலைந்து அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு, எல்லா இடங்களும் வளர்ந்தாக வேண்டும். அதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினார்.

Views: - 170

0

0