யூசுப் பதானை அடிக்கப் பாய்ந்த ஜான்சன்… லெஜன்ட்ஸ் கிரிக்கெட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
3 October 2022, 2:03 pm
Quick Share

லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் போட்டியில் வீரர்கள் இருவர் தாக்கிக் கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லெஜன்ட்ஸ் டி20 கிரிக்கெட் தொடரில் பில்வாரா கிங்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே குவாலிபயர் ஆட்டம் ஜோத்பூரில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியின் யூசுப் பதான் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிரணியின் பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சனுக்கும், யூசுப் பதானுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இருவரும் முதலில் கடுமையான வார்த்தை போரில் ஈடுபட்ட நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும் அளவுக்கு சென்றனர். அப்போது, ஜான்சன் யூசுப்பைத் தள்ளினார். இதையடுத்து இருவரையும் பிரிக்க நடுவர்கள் தலையிட்டு பிரித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 740

0

0