மனைவியை தோளில் சுமந்து திருப்பதி மலையேறிய கணவன் : 70 படிகளில் விறுவிறுவென ஏறிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 1:58 pm
Husband Carry Wife - Updatenews360
Quick Share

மனைவியின் சவாலை ஏற்று திருப்பதி மலை படிக்கட்டுகளில் மனைவியை தோள் மீது சுமந்து மலையேறிய கணவன்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கடியப்புலங்காவை சேர்ந்த சேர்ந்த லாரி உரிமையாளர் வரத வீர வெங்கட சத்யநாராயணா. அவருடைய மனைவி லாவண்யா.

இரண்டு பேருக்கும் 1998 ஆம் ஆண்டு திருமண நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளார். அவர்கள் இரண்டு பேரும் மென் பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் ஒரு மகளுக்கு மகன் பிறந்த நிலையில் தங்களுக்கு பேரன் பிறந்தால் திருப்பதி மலைக்கு நடந்து படியேறி வருகிறோம் என்று வேண்டி கொண்டனர்.

இந்த நிலையில் திருப்பதிக்கு வந்த அவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக நடந்து படியேறி சென்றனர்.

அப்போது கணவன் வேகவேகமாக படியேறி செல்வதை பார்த்த மனைவி லாவண்யா, இது என்ன பிரமாதம் முடிந்தால் என்னை தூக்கி தோள் மேல் வைத்துக்கொண்டு படியேறுங்கள் பார்க்கலாம் என்று சவால் விட்டார்.

மனைவியின் சவாலை ஏற்ற கணவன் அவரை தோள் மேல் சுமந்து கொண்டு படி ஏற துவங்கினார். மனைவியை சுமந்து கொண்டு கணவன் ஒருவர் ஏழுமலையானை தரிசிக்க படியேறி செல்வதை பார்த்த மற்ற பக்தர்கள் அவர்களோடு செல்பி எடுத்துக்கொண்டனர்.

மேலும் பலர் வீடியோ, புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்தனர். தன்னை சுமந்து கொண்டு 70 படிகள் வரை கணவன் ஏறும் வரை அந்த சந்தோஷத்தை அனுபவித்த லாவண்யா அதன்பின் கணவன் தோல் மீது இருந்து இறங்கி விட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Views: - 572

0

0