சக மாணவன் கொடுத்த ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவன் கவலைக்கிடம் : சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சை.. அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2022, 11:57 am
Acid Drink - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மெதுக்கும்மல் பகுதியை சேர்ந்த சுனில்-சோபியா தம்பதியரின் மூத்த மகன் அஸ்வின், குழித்துறை அருகே அதங்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி 6 வகுப்பு பயின்று வருகிறார்.

சம்பவத்தன்று மாணவன் அஸ்வின் மதியம் உணவு சாப்பிட நிற்கும்போது சக மாணவர் ஒருவர் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். அஸ்வினும் வாங்கி குடித்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவனுக்கு வயிறு வலி எடுத்துள்ளது.

தொடர்ந்து பெற்றோர்கள் மாணவனை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, குளிர்பானத்தில் ஆசிட் தன்மை அதிகம் இருந்ததால், குடல், தொண்டை மற்றும் இரு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு கேரள மாநிலம் நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து களியக்காவிளை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 772

0

0