பரதம் ஆடிக்கொண்டிருக்கும் போது மேடையிலேயே பிரிந்த உயிர்… பிரபல பரதநாட்டியக் கலைஞருக்கு நேர்ந்த சோகம்…!!

Author: Babu Lakshmanan
25 March 2022, 11:39 am

மதுரை : மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பரதம் ஆடிக் கொண்டிருக்கும் போதே, பரதநாட்டியக் கலைஞர் மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த காளிதாஸுக்கு (54) பானுமதி என்னும் மனைவியும், பரதக் கலைஞரான பிரியதர்ஷினி என்னும் மகளும், மிருதங்க கலைஞரான விஷ்வ ஹர்ஷன் என்னும் மகனும் உள்ளனர். காளிதாஸ் குடும்பத்தோடு, திருமோகூரில் வசித்து வந்தார்.

தனியார் பள்ளியில் நடன ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், பிரிய கலாலயா என்னும் பரத நாட்டிய பயிற்சி பள்ளியையும் நடத்தி வந்தார். பரதநாட்டிய கலைஞரான மகள் பிரியதர்ஷினியுடன் பல மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் விழாவின் ஒரு பகுதியாக, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில்,மகளுடன் பரதம் ஆடிக்கொண்டிருந்த காளிதாஸ், திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்தார்.இதனால், அதிர்ந்து போன அவரது குடும்பத்தினர், மற்றும் அருகில் இருந்தவர்கள் அவரை துாக்கியுள்ளனர். ஆனால், அப்பவே அவர் உயிரிழந்து விட்டார். இதைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் நேற்று இறுதிச் சடங்கு நடந்தது.

கணவனின் மறைவு குறித்து பேசிய மனைவி பானுமதி, திடீர் இறப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை என்றும், சில நாட்களுக்கு முன் கூட சர்க்கரை அளவு சீராக இருந்ததை உறுதி செய்ததாகவும் அவர் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!