10ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை…திருவாரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

Author: Rajesh
8 April 2022, 10:10 pm
teen abused - updatenews360
Quick Share

திருவாரூரில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 27 ஆண்டுகள் சிறை.மகிளா நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோம்பூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான சரண்ராஜ் என்கிற இளைஞர் கடந்த 2021 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்கள் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். 

புகாரின் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரன்ராஜ் மீது பெண்ணை கடத்தி செல்லுதல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரண்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து சரண்ராஜ் பிணையில் வெளியில் வந்த நிலையில் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி விஜயக்குமார் குற்றவாளி சரண்ராஜீக்கு அதிகபட்ச தண்டனையாக 27 ஆண்டுகள் சிறை தண்டனையும்,நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார். 

இந்த வழக்கில் ஒரு வருடத்திற்குள் 27 ஆண்டுகள் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கிய திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தின் தீர்ப்பை பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர். 

Views: - 550

0

0