மனநலம் பாதித்த பெண் கர்ப்பம்…காப்பகத்தில் நேர்ந்த கொடுமை: ஊழியர் கைது..கோவையில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
8 April 2022, 10:52 pm
Quick Share

கோவை: கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மனநல காப்பகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்பவர் பராமரித்து உடல்நிலையை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணுக்கு வயிறு பெரியதாக இருப்பதை கவனித்த நாகம்மாள் மருத்துவ பரிசோதனை செய்ததில் பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து மனநல காப்பகத்தின் நிர்வாகிகள் அப்பெண்ணை விசாரிக்கையில் அம்மையத்தில் பணிபுரிந்து வந்த தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்த லட்சுமணன்(41) என்பவர் அங்குள்ள பாத்ரூமில் வைத்து தவறாக நடந்ததாகவும், இதேபோல் மூன்று முறை தன்னிடம் தவறாக நடந்ததால் கர்ப்பமானதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து இளம்பெண்ணை கவனித்து வந்த நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் துடியலூர் மகிளீர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கிய லட்சுமணனை கைது செய்தனர்.

கோவையில் ஏற்கனவே பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 607

0

0