2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை : ஆளுநர் உரையுடன் கூடுகிறது முதல் கூட்டம்!.

Author: Udayachandran RadhaKrishnan
8 January 2023, 7:51 pm
TN - Updatenews360
Quick Share

தமிழ்நாடு சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி கூடியது. அக்டோபர் 18, 19 ஆகிய 2 நாட்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.

பேரவை முடிவடையும் நாளில், ஆன்லைன் ரம்மி, இணைய விளையாட்டுகளுக்கு தடை உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை தள்ளி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார். சட்டப்பேரவை விதிகளின்படி ஒரு கூட்டத்தொடர் முடிவடைந்த 6 மாதத்துக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் நாளை கூடவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் வழக்கமாக ஜனவரி முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் தொடங்கும். அதன்படி, 2023-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி 9-தேதி (நாளை) கவர்னர் உரையுடன் தொடங்கவுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு அவை கூட இருப்பதாகவும் அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி எத்தனை நாள் கூட்டத்தை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

Views: - 374

0

0