விபத்தில் பலியான 21 வயது அண்ணன்.. சாவில் மர்மம் : கண்டுகொள்ளாத போலீஸ்… தாயும், தங்கையும் எடுத்த விபரீத முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2023, 2:28 pm
Krishnagiri - Udpatenews360
Quick Share

விபத்தில் பலியான 21 வயது அண்ணன்.. சாவில் மர்மம் : கண்டுகொள்ளாத போலீஸ்… தாயும், தங்கையும் எடுத்த விபரீத முடிவு!!

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த உங்கட்டி கிராமத்தை சேர்ந்த கிரி(21) என்னும் இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்தில் தலையில் காயமடைந்த கிரி கோமோ விற்கு ஆளாகி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, செப்டம்பர் மாதம் 7ம் தேதி உயிரிழந்தார்.

கிரிக்கும் வேறு நபருக்கு சண்டை இருந்ததால் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரின் தங்கை 12ம் வகுப்பு படித்து வந்த காவ்யா (வயது 17) அம்மா காமாட்சி (வயது 40) ஆகிய இருவரும் சூளகிரி போலிசில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளை காண்பிக்குமாறு கூறியும் போலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கிரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதியாக நம்பிய இவர்கள் இன்றும் சூளகிரி காவல் ஆய்வாளரை சந்தித்து வந்து, மனமுடைந்து போன அம்மாவும், தங்கையும் வீட்டிற்கு வந்துள்ளனர். ஏற்கனவே தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது..

என் அண்ணன் இறப்பிற்கான காரணம் தெரியவில்லை, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கடிதம் எழுதி வைத்துள்ள தங்கை காவ்யா, எனது சாவிற்கு யாரும் காரணமில்லை, தற்போது அண்ணனுடன் நாங்கள் என மூன்று உயிர்கள் போன பின்பு இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா என்றும், என் அண்ணன் கிரி வாங்கி கொடுத்த Chain கழுத்தில் அணிந்துள்ளேன் நான் இறந்த பிறகும் அதை அகற்ற வேண்டாமென உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அம்மா,மகள் இருவரும் புடவையில் வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.

போலிசார் நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்களை காப்பாத்தி இருக்கலாம் எனக்கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்..

பாகலூர் காவல் ஆய்வாளர் சரவணன், ஒசூர் டிஎஸ்பி பாபு பிரசாந்த் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடலை எடுக்க உறவினர்கள் அனுமதிக்கவில்லை.

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் நேரில் வந்து, உங்கள் சந்தேகங்களை புகாராக எழுதி கொடுங்கள், நான் விசாரித்து போலிசார் கவன குறைவாக செயல்பட்டிருந்தால் ஒரே நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர், இரு சடலங்களையும் ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது..

அண்ணன், மகன் மீது பாசம் கொண்டவர் உயிரிழந்து ஒன்றரை மாதமான பின்னர் மனமுடைந்து தற்க்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது…

Views: - 265

0

0