ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை.. மகனை கொன்று விட்டு, தாயும், தந்தையும் விபரீத முடிவு.. போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
22 February 2023, 3:49 pm

திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே உள்ள வாசனம்பட்டு கிராமத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியற்குட்பட்ட திருமணிகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வாசனும் பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கலையரசன் (37). இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், யாமநாத் (4) என்ற மகனும் இருந்தனர்.

நேற்றிரவு வழக்கம் போல தூங்கச் சென்ற இவர்கள், அதிகாலை நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது, மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து கிராம மக்கள் மப்பேடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தினர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பிரேதங்களைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமா அல்லது குடும்பத் தகராறு காரணமா என்ற பல்வேறு காரணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் தற்கொலை தொடர்பாக கடிதம் போன்ற தடயங்கள் ஏதேனும் உள்ளதா என்பதையும் காவல் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?